கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ., இல்லம் அரசுடமை எதிர்த்து தீபா வழக்கு

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், போயஸ் தோட்டம் இல்லத்தை, அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபா மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெ.,யின் சட்டப்பூர்வ வாரிசாக, அவரது சகோதரரின் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. ஜெ., சொத்துக்களை நிர்வகிக்கவும், அவர்கள் நியமிக்கப்பட்டனர்.சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெ., இல்லத்தை, நினைவிடமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்தது. அதைத்தொடர்ந்து, இல்லம் அமைந்துள்ள, 24 ஆயிரம் சதுரடி நிலம், கட்டடம், மரங்கள் ஆகியவற்றுக்கு, 68 கோடி ரூபாய் நிர்ணயித்து, சிவில் நீதிமன்றத்தில், தமிழக அரசு செலுத்தியது.இந்நிலையில், ஜெ., இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தீபா மனு தாக்கல் செய்துள்ளார்.

இல்லத்தில் இருந்து அசையா சொத்துக்களை எடுக்க தடை விதிக்கவும், அரசு செலுத்திய தொகையில், வரி பாக்கியாக, 36 கோடி ரூபாய் பெற, வருமான வரித்துறைக்கு தடை விதிக்கவும், மனுவில் கோரப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
01-ஆக-202010:27:47 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan ஆளில்லாத வீட்டில் கொள்ளையடிக்கும் அனசாணையைத் திரும்பப் பெறவேண்டும். தீபாவின் பக்கம் நியாயமுள்ளது. சட்டப்படியான வாரிசுகளிடம் அம்மாவின் இல்லத்தை ஒப்படைக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X