பொது செய்தி

தமிழ்நாடு

வடமதுரையில் வேல் போராட்டம்

Added : ஆக 01, 2020
Share
Advertisement
 வடமதுரையில் வேல் போராட்டம்

வடமதுரை : கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து வடமதுரையிலும் பொது மக்கள் வீடுகளில் வேல் வரைந்து, வேல் போராட்டம் நடத்தினர்.

வீடுகளில் வேல் வரைந்து வழிபாடு செய்ய பா.ஜ., மாநில தலைவர் முருகன் வலியுறுத்தினார். பழநியில் பக்தர்கள் பலர் வீடுகளில் வேல் வரைந்து கோலமிட்டதுடன், கந்த சஷ்டியை பாராயணம் செய்தனர். இதேபோல வடமதுரை பக்தர்களும் ஓவியர்களை வேலைக்கு அமர்த்தி வீடுகளில் வேல் வரைந்தனர்.அண்ணா நகர் பக்தர் பெருமாள் கூறுகையில், ''கந்தசஷ்டி கவசத்தை அவமதித்த கருப்பர்கூட்டத்தை பின்னால் இருந்து இயக்கும் கட்சியினரை கண்டிக்கிறோம். எங்கள் மனம் மிகவும் புண்பட்டதால் வீடுகளில் வேல் வரைகிறோம். இதனால் மனதில் எழுச்சி ஏற்படுகிறது.

இந்த எழுச்சியை பார்த்து ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி, தங்கள் அமைப்பு, வாழ்க்கையை முன்னேற்ற நினைப் பவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொள்வார்கள் என நம்புகிறேன்'' என்றார். இதே போல் கந்த சஷ்டி கவசம் பெருமை குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஊட்டி 'இளையபாரதம்' அமைப்பின் தலைவர் சரவணன் தலைமையில், நிர்வாகிகள், ஊட்டி நகரில் உள்ள, ஹிந்துக்கள் வீடு மற்றும் கடைகளில், கந்த சஷ்டி கவச விழிப்புணர்வு படங்களை ஒட்டி வருகிறார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X