லண்டன்: பிரிட்டனில் வடக்கு பகுதியில் கொரோனா பரவல் மீண்டும் துவங்கி இருப்பதால் ஊரடங்கு தளர்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன், 'மக்கள் அதிகம் கூடக் கூடிய வாய்ப்புள்ள கேசினோஸ், ஸ்கேட்டிங் போன்ற விஷயங்களுக்கு தடை நீட்டிக்கப்பட வேண்டும். ஊரடங்கு தளர்வு என்பது சூழ்நிலையைப் பொறுத்து தான் முடிவு செய்ய முடியும். தளர்வுகளுக்கு தடை போட தயங்கக் கூடாது. பிரிட்டனில் கொரோனா இரண்டால் அலை வீசுகிறது. கொரொனா பாதிப்புகளை மீண்டும் கூட்ட பிரிட்டன் அனுமதிக்காது.' இவ்வாறு போரிஸ் கூறினார்.
அந்நாட்டு சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் கூறியதாவது, ' ஊரடங்கு மீண்டும் கடுமையாக்க வேண்டும். ஏனென்றால் மக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் உள்ளனர். ஊரடங்கு நீட்டிப்பது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. ஆனால் ஐரோப்பிய மக்களின் நன்மைக்காக இதை செய்ய வேண்டியது உள்ளது. பிரிட்டனில் கொரோனா இரண்டாம் அலை வீசுவது புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உறுதியாகிறது' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 880 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு மொத்தம் 3,03,181 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மொத்தம் 46,119 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE