பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய கிணற்றில் 'பிளீச்சிங்' கழிவுநீர்: சலவை ஆலை நிர்வாகம் 'அட்டூழியம்'

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 விவசாய கிணற்றில் 'பிளீச்சிங்' கழிவுநீர்: சலவை ஆலை நிர்வாகம் 'அட்டூழியம்'

திருப்பூர்:அக்ரஹாரப்புத்துாரில் உள்ள சலவை ஆலை கழிவை, அருகில் உள்ள விவசாய கிணற்றில் வெளியேற்றியதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர், மங்கலம் ஊராட்சி, அக்ரஹாரப்புத்துாரில் சாயந்தோட்டம் பகுதியில், சலவை ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அருகிலேயே, தென்னந்தோப்பில் விவசாய கிணறு ஒன்றும் உள்ளது.நேற்று மதியம், தென்னந்தோப்புக்கு தண்ணீர் பாய்ச்சியதில், பிளீச்சிங் கழிவு கலந்து, கடுமையாக துர்நாற்றம் வீசியது. அதிர்ச்சியடைந்த விவசாயிகள், மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு தகவல் அளித்தனர். பறக்கும் படை அதிகாரிகள் சென்று கிணற்றை ஆய்வு செய்தனர்.கிணற்றில், அதிக அளவு பிளீச்சிங் கழிவு கலந்துள்ளதால், தண்ணீரை வெளியேற்ற அறிவுறுத்தினர். விவசாய கிணற்றில் இருந்த தண்ணீர், மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. ஆலை உரிமையாளரிடம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:நீண்ட காலமாக பிளீச்சிங் கழிவுநீரை, நிலத்தில் தேக்கி பிரச்னை செய்தனர். தற்போது, அப்பிரச்னை தீர்ந்துள்ளது. விவசாய கிணறு, சாய ஆலை அமைந்துள்ள நிலத்துக்கும் உரிமையுள்ளது. இதிலிருந்து விவசாயத்துக்கு மட்டும் தண்ணீர் எடுக்க வேண்டும்.பிளீச்சிங் கழிவுநீரை அப்படியே கிணற்றில் இறக்கியுள்ளனர். கடந்த, 10 நாட்களாக மழை பெய்ததால், நாங்கள் தென்னை மரத்துக்கு தண்ணீர் பாய்ச்சவில்லை. தற்போது, தண்ணீர் பாய்ச்சிய போதுதான், கடும் துர்நாற்றம் வீசியது. மாவட்ட நிர்வாகம் தகுந்த தீர்வு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், கூறுகையில்,''மாசுக்கட்டுப்பாடு வாரியம் உடனடியாக நடவடிக்கை வேண்டும். இல்லாவிடில், போராட்டம் நடத்துவோம்,'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஆக-202019:38:00 IST Report Abuse
ருத்ரா மிகச் சிறந்த தொழில் நகரமான திருப்பூர் விவசாய நிலம் கிணற்றை அசுத்தப்படுத்துவது தன் இனிய பெயரை இழக்கும். கழிவு நீருக்கு வழிவகை செய்யாமல் தொழில் தொடங்க அனுமதி கொடுக்க கூடாது. விவசாயிகளின் வேர்வைக்கு மதிப்பு தரவேண்டும்.
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
01-ஆக-202015:15:29 IST Report Abuse
babu புதிய கார்பொரேட் ஏஜெண்ட்(அரசாங்கம்) சட்டப்படி, நிறுவனம் தனக்குத்தானே சர்ட்டிபிகேட் அளித்து மக்களிடம் காட்டினால் போதுமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X