பொது செய்தி

தமிழ்நாடு

'கலெக்டர் ஆபீசுக்கு வராதீங்க!' போனில் குறைகளை தெரிவிக்கலாம்!

Added : ஆக 01, 2020
Share
Advertisement

திருப்பூர்:கலெக்டர் அலுவலகத்தில், இருவருக்கு கொரோனா பரவியுள்ளதால், பொதுமக்கள் நேரில் வராமல், போனில் குறைகளை தெரிவிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமை தோறும் நடக்கும், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், மார்ச், 23ம் தேதிக்கு பிறகு நடக்கவில்லை. பொதுமக்கள், தங்களது அவசரமான கோரிக்கைகளை தெரிவிக்க, மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.நாளுக்குநாள் மக்கள் வருவது அதிகரித்து வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும், இரண்டு பேருக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பொதுமக்கள் வருகை அதிகரிக்கும்பட்சத்தில், கொரோனா தொற்று பரவவும் அதிக வாய்ப்புள்ளது.இதனால், தங்களது குறைபாடுகளை, பொதுமக்கள் போன் மூலம் தெரிவிக்க, மாவட்ட நிர்வாகம் அவசர ஏற்பாடுகளை செய்துள்ளது.கலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், '' திங்கள்தோறும், போன் வாயிலாக குறைகேட்பு முகாம் நடத்தப்படும். காலை, 11:00 முதல், மதியம், 1:00 மணி வரை, 0421 2969999 என்ற எண்களில், மக்கள் தங்களது புகாரை பதிவு செய்யலாம். பதிவு செய்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X