பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா: பரிசோதனை முகாம் நடத்த எதிர்பார்ப்பு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

திருப்பூர்:கலெக்டர் அலுவலகம் வரை கொரோனா பரவியுள்ளதால், அனைவருக்கும் பரிசோதனை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. டாக்டர், செவிலியர், போலீசாரும், கொரோனா தாக்குதலுக்கு தப்பவில்லை. இந்நிலையில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், பஸ் போக்குவரத்து இல்லாததால், காரில் வந்து செல்கின்றனர். ஒரே காரில் வந்து சென்ற, ஒரு வருவாய்த்துறை அலுவலர் மற்றும் தொழிலாளர் துறை அலுவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.உடன் பயணித்த, வருவாய்த்துறை அலுவலர்கள் இருவருக்கு கொரோனா பரிசோதனை நடக்க இருக்கிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில், தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களில் உள்ள அலுவலர்கள் அதிக தொடர்பில் இருக்கின்றனர். இதனால், கொரோனா தொற்று பரவியிருக்கவும் வாய்ப்புள்ளது.
எனவே, அனைத்து அலுவலருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.அரசு அலுவலர்கள் கூறுகையில், 'கொரோனா பாதித்த அலுவலருக்கு, எவ்வித அறிகுறியும் இல்லை. சளி, காய்ச்சல் இல்லாமல், நுகரும் தன்மை குறைந்ததால், தாங்களாக சென்று பரிசோதனை செய்துள்ளனர்.கலெக்டர் அலுவலகத்தில், அனைவரும் வழக்கம் போல் நடமாடி, பணியாற்றி கொண்டிருக்கின்றனர். எனவே, அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய, கலெக்டர் உத்தரவிட வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X