சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளித்தலை நகராட்சி கமிஷனர் உட்பட 6 பேர் 'சஸ்பெண்ட்'

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

குளித்தலை : குளித்தலை நகராட்சியில், ஆவணங்களை திருத்தி, ௧ கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, கமிஷனர் உட்பட ஆறு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில், 2019 - 20ம் ஆண்டுக்கான, வருடாந்திர தணிக்கை ஆய்வு நடந்து வருகிறது. இங்கு, கணக்காளராக பணியாற்றும் சத்யா, 57, என்ற பெண், ஆவணங்களை திருத்தி, பி.எப்., நகராட்சி நிர்வாக நிதி போன்றவற்றில், ௧ கோடி ரூபாய்க்கும் மேல், மோசடி செய்தது தெரிந்தது.இது குறித்த புகாரில், கரூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், கமிஷனர் மோகன் குமார், 52, பொறியாளர் புகழேந்தி, 57, கணக்காளர் சத்யா, அலுவலர்கள் சரவணன், 48, யசோதாதேவி, 55.மேலும், நகராட்சி முன்னாள் பொறுப்பு கமிஷனரும், சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் பணிபுரிந்து வருபவருமான கார்த்திகேயன், 57, ஆகிய ஆறு பேரை சஸ்பெண்ட் செய்து, நகராட்சி நிர்வாக ஆணையரக தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
01-ஆக-202008:07:58 IST Report Abuse
Bhaskaran பணத்தை இவிங்க சொத்துக்களை ஏலத்துக்கு விட்டு அரசுகஜானாவில் serka vendum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X