பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தும் முகாமுக்கு திருமண மண்டபம் ஒப்படைப்பு

Added : ஆக 01, 2020
Share
Advertisement
 தனிமைப்படுத்தும் முகாமுக்கு திருமண மண்டபம் ஒப்படைப்பு

அன்னூர்:கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமுக்கு, தனியார் திருமண மண்டபம், 100 படுக்கைகளுடன் ஒப்படைக்கப்பட்டது.அன்னூர் தாலுகாவில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அன்னூர் பகுதியில், 3 திருமண மண்டபங்களை, வருவாய்த் துறையிடம், கொரோனா சிகிச்சைக்கு ஒப்படைக்கும்படி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.இதன்படி, கரியாம்பாளையம், 100 படுக்கைகள் மற்றும் உபகரணங்களுடன், செல்வநாயகி அம்மன் திருமண மண்டபத்தை, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷிடம், அறக்கட்டளை நிர்வாகிகள் ஒப்படைத்தனர். 'மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்க வைக்கப்படுவார்கள்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தாசில்தார் சந்திரா, வருவாய் ஆய்வாளர் ரேவதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X