பொது செய்தி

தமிழ்நாடு

அசத்திய அன்னுார் அரசு பள்ளிகள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

அன்னூர்:பிளஸ் 1 தேர்வில், அன்னூர் வட்டாரத்தில், மூன்று அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.காட்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், தேர்வு எழுதிய 49 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மூன்றாவது ஆண்டாக, இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக, பிளஸ்2 தேர்விலும், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது, என, தலைமையாசிரியர் பிரபாகர் தெரிவித்தார்.கெம்பநாயக்கன்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளியில், தேர்வு எழுதிய, 27 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு, முதல் முறையாக, பிளஸ் 1 தேர்வு எழுதி, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளதாக, தலைமையாசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன் தெரிவித்தார்.அரசு உதவி பெறும் கே.ஜி.பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், தேர்வு எழுதிய, 126 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அன்னூர், அரசு மேல்நிலைப்பள்ளி, 93 சதவீத தேர்ச்சியும், சொக்கம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 93 சதவீத தேர்ச்சியும், ஆணையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 88 சதவீத தேர்ச்சியும் பெற்று அசத்தி உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X