அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேதம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Added : ஆக 01, 2020
Share
Advertisement
 கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேதம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை : 'தமிழகத்தில், கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன' என, சுகாதார அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொற்றுக்கு உரிய மருந்துகள் இல்லாத நிலையில், நோயின் தன்மைக்கேற்ப, அலோபதி முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், இந்திய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேதா உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்கு, 'ஆரோக்கியம்' திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார். இதையடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.

சிறுவில்வம், திப்பிலி வேர், தலமூலம் உள்ளிட்ட, 17 மூலிகைகள் அடங்கிய, ஆயுர்வேத மருந்தான இந்துகாந்த கனுாயம் பயன்படுத்தப்படுகிறது.மேலும், கடுக்காய் உள்ளிட்ட, 27 பொருட்களால் தயாரிக்கப்படும் அகஸ்திய ரசாயனம் மற்றும் வெண்பூசணி உள்ளிட்ட, 11 பொருட்களால் தயாரிக்கப்படும், கூஷ்மாண்ட ரசாயனம் போன்றவை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கின்றன.இவற்றை காலை மற்றும் இரவு என, இருவேளை சாப்பிட, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இம்மருந்துகளை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் செயல்படும், ஆயுர்வேத சிகிச்சை பிரிவுகளில் பெற்று கொள்ளலாம்.

நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருந்துவ கல்லுாரி மருத்துவமனையிலும், எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்று கொள்ளலாம்.குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியர், மருத்துவரின் ஆலோசனைப்படி அருந்த வேண்டும். ஏற்கனவே, சித்தா மருந்தான கபசுர குடிநீரும், ஓமியோபதி மருந்தான ஆர்செனிக் ஆல்பம் 30 சி ஆகியவையும், எவ்வித கட்டணமில்லாமல் வழங்கப்படுகின்றன.இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள், கொரோனா சிகிச்சையை மேம்படுத்த வலுப்படுத்துவதாக அமையும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X