மாஜி முதல்வர்களின் டிரைவர் கிணற்றில் தவறி விழுந்து பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' முதல்வர்களின் டிரைவர் கிணற்றில் தவறி விழுந்து பலி

Added : ஆக 01, 2020
Share

ஆத்துார் : 'மாஜி' முதல்வர்களுக்கு கார் ஓட்டி, ஓய்வு பெற்ற டிரைவர், கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி, குறிச்சி ஊராட்சி, அணைமேட்டைச் சேர்ந்தவர், குமாரசாமி, 64. டில்லி தமிழ்நாடு இல்லத்தில், கார் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு, மனைவி, மூன்று மகன்கள் உள்ளனர்.இதில், மூத்த மகன் யுவராஜ், 35; டில்லி மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர். இரண்டாவது மகன் மணி, 33; டில்லி தமிழ்நாடு இல்ல கார் டிரைவர். கடைசி மகன் ரவி, 31; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

மறைந்த முதல்வர்களான, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர், டில்லியில், பிரதமர், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்களை சந்திக்க செல்லும்போது, குமாரசாமி, அவர்களுக்கு டிரைவராக பணிபுரிந்தார். டில்லியில், 35 ஆண்டுகளாக பணிபுரிந்தவர், 2017ல் ஓய்வு பெற்றார். குடும்பத்துடன் டில்லியிலேயே வசித்து வந்தார். குறிச்சியில் உள்ள தாய் தங்காயி, 90, உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், கடந்த ஜனவரியில், இங்கு வந்தவர், தாய்க்கு துணையாக இருந்தார். கடந்த, 29ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடினர்.

நேற்று காலை, 8:00 மணிக்கு, விவசாயி கந்தசாமியின் கிணற்றில் இறந்து கிடந்தது தெரிந்தது. தலை, உடல் பகுதி யில் காயங்களுடன் குமாரசாமி உடலை, வாழப்பாடி போலீசார் மீட்டனர். அவர் கால் தவறி கிணற்றில் விழுந்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X