கோவை:பிளஸ் 1 ரிசல்ட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்தும், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நுாறு சதவீத தேர்ச்சி சரிந்துள்ளது.கோவை மாவட்டத்தில், 357 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதினர். இது தவிர, 219 தனித்தேர்வர்களும் தேர்வெழுதினர்.மாநில ரேங்க் பட்டியலில் முதலிடம் பிடித்தாலும், சென்டம் ரிசல்ட்டை ஒப்பிடுகையில், கடந்தாண்டை விட, குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.கடந்தாண்டில், 214 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது 197 பள்ளிகள் சென்டம் பெற்றுள்ளன. 86 அரசு மேல்நிலைப்பள்ளிகள் கடந்தாண்டை விட, 1.47 சதவீதம் அதிகமாக பெற்று, 95.25 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.ஆனால், கடந்தாண்டு 13 பள்ளிகள் சென்டம் பெற்ற நிலையில், தற்போதும் 13 பள்ளிகளே நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. எந்த முன்னேற்றமும், அரசுப்பள்ளிகளின் சென்டம் ரிசல்ட்டில் காணப்படவில்லை. இதற்கான காரணங்கள் குறித்து, பகுப்பாய்வு மேற்கொள்ள இருப்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE