பிளஸ் 1 தேர்வில் சாதித்த மாற்றுத்திறன் மாணவர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1 தேர்வில் சாதித்த மாற்றுத்திறன் மாணவர்கள்

Added : ஆக 01, 2020
Share

கோவை:பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகளில், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்கள், நுாறு சதவீத தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.இது தவிர, உடல் ரீதியான குறைபாடுள்ள மாணவர்கள், 94.44 சதவீதமும், இதர குறைபாடுள்ள மாற்றுத்திறன் மாணவர்கள், 92.45 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும், மாற்றுத்திறன் மாணவர்களில், எஸ்.சி.எம்., வதம்பச்சேரி மேல்நிலைப்பள்ளி மாணவர் சஞ்சய், 600க்கு 472 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இதோடு, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும், 94 மாணவர்கள் தேர்வெழுதியதில், 92 மாணவர்கள் வெற்றி பெற்றதாக, அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X