சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சகோதரர்கள் மர்மச்சாவு குளிர்பானத்தில் விஷமா?

Added : ஆக 01, 2020
Share
Advertisement

சேலம் : குளிர்பானம் குடித்த சகோதரர்கள், மர்மமான முறையில் இறந்தனர்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, கணபதி நகரைச் சேர்ந்தவர் பட்டாபி, 60. இவரது மகன்கள் ஓபுளி, 35; மாதேஷ், 28. நெசவு தொழிலாளிகளான இவர்களுக்கு, சொந்தமாக வீடு இல்லை. ஊரடங்கால், வேலை இழந்து தவித்து வந்தனர். இதனால், மூவரும், கோட்டை டவர்ஸ் முதல், தலைவெட்டி முனியப்பன் கோவில் வரையான பகுதியில், தன்னார்வலர்கள் வழங்கும் உணவை சாப்பிட்டு, இரவில், அதே பகுதியில் துாங்கி வந்தனர்.அவர்களுடன் துாங்குவதை வழக்கமாக வைத்திருந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், நேற்று காலை, குளிர்பான பாட்டில் கொடுத்தார்.

அதை குடித்த சகோதரர்கள் இருவரும், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தனர். குளிர்பானத்தில் விஷம் கலக்கப்பட்டதா என, செவ்வாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். அதே பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா மூலம், குளிர்பான பாட்டிலை வழங்கிய மர்ம நபரை அடையாளம் கண்ட போலீசார், அவரை தேடி வருகின்றனர். தந்தை பட்டாபியிடமும் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X