பொது செய்தி

தமிழ்நாடு

வீடு வீடாகச் சென்று பரிசோதனை: களமிறங்கியது சிறப்பு குழு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கோவை;கோவை மாநகராட்சி குழுவினர், 'கொரோனா' தொற்று அதிகமுள்ள பகுதியில், வீடு வீடாகச் சென்று, காய்ச்சல் பாதிப்பு, நோய் தொற்று அறிகுறி இருக்கிறதா என, கள ஆய்வு செய்கின்றனர்.கோவை நகர் பகுதியில், 'கொரோனா' தொற்று பரவல் தடுக்க, மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர், இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். டவுன்ஹால் பிரதான அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் வகையில், கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட பகுதியில், 'கொரோனா' தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பின், வீடு வீடாகச் சென்று, காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என, கள ஆய்வு செய்ய, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.அதன் படி, கிழக்கு மண்டலத்தில், மண்டல சுகாதார அலுவலர் சந்திரன் மேற்பார்வையில், தலா இருவர் வீதம், 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவினருக்கும், 'தெர்மல் ஸ்கேனர்' மற்றும், 'பல்ஸ் ஆக்சி' மீட்டர் வாங்கித் தரப்பட்டுள்ளது.காய்ச்சல் பாதிப்பு, 99 டிகிரிக்கு அதிகமாக இருந்தாலும், உடலில் ஆக்சிஜன் அளவு, 95க்கு கீழே இருந்தாலும், உடனடியாக, மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுவரை, 3,700 வீடுகளுக்குச் சென்று, 15 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 40 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டது; 18 பேரின் சளி, ரத்த மாதிரி சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஒரே ஏரியாவில், அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டால், மேலும் பரவாமல் தடுக்க, வீடு வீடாகச் சென்று, பரிசோதிக்கிறோம். இம்முயற்சி, நல்ல பலனை தருகிறது. நோயின் தன்மையை மக்களுக்கு புரிய வைக்க முடிகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X