சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கோவை:கோவையில், நெடுஞ்சாலை பணியின்போது, இளநிலை பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.கோவை மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில், கிராம சாலைகள் அமைக்கும் பிரிவில், இளநிலை பொறியாளராக பணியாற்றுபவர் சுப்பிரமணியம்,57. இவர், கடந்த, 25ம் தேதி, மலுமிச்சம்பட்டி -- மேட்டூர் சாலையில், தார் சாலை அமைக்கும் பணியை பார்வையிடச் சென்றார்.ரோலர் வண்டி டிரைவர் ராஜேந்திரனிடம், அப்பகுதியைச் சேர்ந்த இருவர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதை விசாரித்த இளநிலை பொறியாளர் சுப்பிரமணியத்தையும் தாக்கியுள்ளனர். அவ்விருவர் மீதும், போலீசார் வழக்கு பதிந்து, ஜாமினில் விடுவித்துள்ளனர்.அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X