சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேரளாவிற்கு, மாடுகளை கடத்த முயன்ற மூன்று லாரிகள் பறிமுதல்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

தஞ்சாவூர் : கேரள மாநிலத்திற்கு, மாடுகளை கடத்த முயன்ற, மூன்று லாரிகளை பறிமுதல் செய்த தஞ்சை போலீசார், மூன்று டிரைவர்களையும் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து, கேரள மாநிலத்திற்கு, இறைச்சிக்காக மாடுகளை கடத்துவதாக, எஸ்.பி., தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு ரகசிய தகவல் வந்தது.ஒரத்தநாடு, டி.எஸ்.பி., செங்கமலக்கண்ணன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, மாடுகளை ஏற்றுவதற்காக, மூன்று லாரிகள் வந்தன. லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர்கள் மூவரை கைது செய்து, தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனைக்கு பின், தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

மேலும், மாடுகளை வாங்கி விற்கும் தரகரான, இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரிடம், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X