சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி கணக்கில் ரூ.5 கோடி சுருட்டல்:

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வங்கி கணக்கில் ரூ.5 கோடி சுருட்டல்:

தஞ்சாவூர் : -தஞ்சையில், வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து, 5 கோடி ரூபாய்க்கும் மேல் எடுக்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியை அளித்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில், ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் சிலருக்கு, பணம் எடுக்காமலேயே பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாக, எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது. புகார்சில வாடிக்கையாளர் கணக்கில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய் வீதம் அடுத்தடுத்து, 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை நகரில் மட்டும், 100க்கும் மேற்பட்டோர் கணக்கில் இருந்து, பணம் எடுக்கப்பட்டுள்ளது.வங்கிக்கு சென்று கேட்ட போது, 'எங்களுக்கு தெரியாது' என, அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். அதனால், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதிராம்பட்டினத்தில் உள்ள இந்தியன் வங்கி மற்றும் கனரா வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து மட்டும், 3 கோடி ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கணக்குகளை, 'ஹேக்' செய்து, மோசடியாக பணம் எடுக்கப்பட்டிருப்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பான வழக்குகளை, சென்னையில் உள்ள சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றி விட்டதாக, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். சினிமா பாணியில் அரங்கேறும் இந்த மோசடியால், தஞ்சை மாவட்ட மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியன் கூறியதாவது:என் வங்கிக் கணக்கில், 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துள்ளனர். ஆய்வு செய்ததில், திருச்சியில் இருந்து பணம் எடுக்கப்பட்டது, தெரிந்தது. அதனால், ஏ.டி.எம்., கார்டு செயல்பாடுகளை முடக்கி விட்டேன்.நடவடிக்கை இல்லைஅதன் பிறகும் பணம் எடுக்க முயற்சித்துள்ளனர். அதற்கான எஸ்.எம்.எஸ்., எனக்கு வந்தது. இது தொடர்பாக, வங்கியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதுபோன்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்து உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி ஊழியர்கள் கூறுகையில், 'அடுத்தடுத்து புகார்கள் வந்ததால், தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் மனு அளித்துள்ளோம். தலைமை அலுவலகத்திற்கும் புகார் அளித்துள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
01-ஆக-202020:03:05 IST Report Abuse
Krishnamurthy Venkatesan IN MY CASE ALSO, SOMEBODY HAS TAKEN THOUSANDS OF MONEY. I BLOCKED MY ACCOUNT IMMEDIATELY. I LODGED A COMPLAINT WITH TN CYBER CRIME BRANCH. THE MONEY HAS BEEN PAID TO GOIBIBO ACCOUNT.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X