சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' கடையில் கொள்ளை போலீசில் சிக்கிய பாட்டில்கள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement
 'டாஸ்மாக்' கடையில் கொள்ளை போலீசில் சிக்கிய பாட்டில்கள்

உளுந்துார்பேட்டை : 'டாஸ்மாக்' கடை பூட்டை உடைத்து, மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில், திருவெண்ணெய்நல்லுார் சாலையில், டாஸ்மாக் கடை உள்ளது. சூப்பர்வைசர் குணசேகரன், விற்பனையாளர் ஜெயராமன் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்து, கடையை பூட்டிச் சென்றனர்.செம்மணங்கூர் பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ், 65, இரவு பாதுகாப்பு பணியில் இருந்தார். நள்ளிரவில், இரண்டு பைக்குகளில் மூவர் வந்தனர்.

ஹரிதாஸ் வாயில் துணியை அடைத்து, கைகளை கட்டினர்.பின், கடையின் பூட்டை உடைத்து, மது பாட்டில்கள் இருந்த, 10 பெட்டிகளை சாக்கு பையில் |கட்டினர். காவலரை கடைக்குள் தள்ளி, 'ஷட்டரை' இறக்கிச் சென்றனர்.பாண்டூர் அருகே, இரவு ரோந்து வந்த, போலீஸ்காரர் தீபக், சாக்குப் பையுடன் பைக்கில் வந்த மூவரையும் பிடித்து விசாரித்தார். அவர்கள், தீபக்கை தாக்கி, மது பாட்டில்கள் மற்றும் ஒரு பைக்கை விட்டு, மற்றொரு பைக்கில் தப்பிச் சென்றனர்.

உளுந்துார்பேட்டை போலீசார், தீபக்கை மீட்டு, பைக் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின், டாஸ்மாக் கடைக்குச் சென்று, ஷட்டரை திறந்து, ஹரிதாஸை மீட்டனர். தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X