பொது செய்தி

இந்தியா

சாதிக்க துடிக்கும் மாணவருக்கு ஜனாதிபதி தந்த பிரத்யேக பரிசு

Updated : ஆக 01, 2020 | Added : ஆக 01, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
President, Ram nath Kovind, bicycle, delhi, delhi news, President Ram Nath Kovind

புதுடில்லி : வறுமையிலும், சிறந்த சைக்கிள் பந்தய வீரராக வேண்டும் என்ற இலக்குடன், சாதிக்கத் துடிக்கும் மாணவரை ஊக்குவிக்கும் வகையில், அவருக்கு சைக்கிளை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பரிசாக வழங்கியுள்ளார்.

டில்லியில் உள்ள அரசு பள்ளியில், ரியாஸ் என்ற சிறுவன், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், டில்லிக்கு அருகே உள்ள காசியாபாதில், வாடகை வீடு ஒன்றில் தங்கியுள்ளார். இவரின் பெற்றோர், பீஹாரில் வசித்து வருகின்றனர். பெற்றோருக்கு உதவும் வகையில், உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலையை, ரியாஸ் செய்து வருகிறார்.

இப்படி பொறுப்புடன் உள்ள ரியாசுக்கு, சிறந்த சைக்கிள் பந்தய வீரராக வலம் வர வேண்டும் என்பதே கனவு. 2017ல் நடந்த டில்லி மாநில சைக்கிள் பந்தய போட்டியில், இவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அசாமில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், நான்காம் இடத்தை பிடித்து, அசத்திஉள்ளார்.


latest tamil news



சொந்தமாக சைக்கிள் இல்லாததால், பிறரிடம் இருந்து, சைக்கிளை வாங்கிச் சென்று, பயிற்சிகளில் ரியாஸ் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் தொடர்பான செய்திகள், ஜனாதிபதியின் பார்வைக்கு சென்றன.

இந்நிலையில், ரியாசை ஊக்குவிக்கும் விதமாக, அவருக்கு, புதிய பிரத்யேக சைக்கிளை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று பரிசாக வழங்கியுள்ளார். உலகத் தர சைக்கிள் பந்தய வீரராக வலம் வருவதற்கு, தன் வாழ்த்துகளையும், ஜனாதிபதி சிறுவனிடம் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
01-ஆக-202009:31:13 IST Report Abuse
thulakol நந்தகோபால் நண்பர் சந்தேகம் இருந்தால் அந்த மாணவினிடம் விசாரிக்கலாம்
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
01-ஆக-202008:01:14 IST Report Abuse
thamodaran chinnasamy இதுதான் இந்திய ஜனநாயகம். சில சமூகத்தைச்சேர்ந்த அறிவு சார்ந்த நல்லோரே நல்ல கண்ணோட்டத்துடன் வளர்ச்சிப்பாதையில் பீடு நடைபோட மக்களை ஊக்குவியுங்கள்.
Rate this:
Cancel
01-ஆக-202006:55:49 IST Report Abuse
ருத்ரா சாதனை அடுத்த கட்டம் நோக்கி செல்ல வாழ்த்துக்கள். ஊக்குவித்த திரு ஜனாதிபதி அவர்கள் மனதில் நிற்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X