பொது செய்தி

தமிழ்நாடு

குளச்சல் போரின் 279-வது வெற்றி தினம்

Added : ஆக 01, 2020
Share
Advertisement
 குளச்சல் போரின் 279-வது வெற்றி தினம்

நாகர்கோவில் : குளச்சல் போரில் டச்சுப்படையை திருவிதாங்கூர் மன்னர் வென்ற 279-வது ஆண்டு வெற்றி தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

1741 ஜூன் ல் டச்சுப்படையினர் திருவிதாங்கூர் சமஸ்தானம் மீது படையெடுத்து வந்தனர். திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா கடற்கரையில் பனைமரங்களை பீரங்கிகள் போல் நிறுத்தி, வீரர்களை நிறுத்தினார். ஆழ்கடலில் இருந்து பார்த்த டச்சுப்படையினர் திருவிதாங்கூர் மன்னர் படைபலத்துடன் இருப்பதாக கருதி சரணடைந்தனர். ஜூலை 31ல் டச்சுப்படையை மார்த்தாண்டவர்மா வென்றார். அதன் தளபதி டிலனாய் மன்னரிடம் சரணடைந்து பின்னாளில் திருவிதாங்கூரின் படை தளபதியாக மாறினார்.

இதன் 279-வது வெற்றிதினம் நேற்று கொண்டாடப்பட்டது. குளச்சலில் உள்ள வெற்றி துாணில் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் , குளச்சல் நகரசபை ஆணையர் ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X