கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கடல் பசுக்களை பாதுகாக்க கோரிய வழக்கு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

மதுரை : -கடல் பசுக்களை பாதுகாக்க கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை, அதலையைச் சேர்ந்த, புஷ்பவனம் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில், மன்னார் வளைகுடா, அந்தமான் தீவுகள், குஜராத் கட்ச் வளைகுடாவில், 250 கடல் பசுக்கள் இருப்பதாக, ஆய்வில் தெரிய வந்தது. சட்டவிரோதமாக மீன் பிடித்தல், வேட்டையாடுதல் மூலம், கடல் பசுக்கள் அழிந்து வருகின்றன.இதை உட்கொண்டால், மனித உடலில் வெப்பநிலை தணிந்து, குளிர்ச்சி ஏற்படும் என்ற தவறான நம்பிக்கையில் வேட்டையாடுகின்றனர். இதனால் கடல்வளம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும்.

ராமநாதபுரம் கீழக்கரை, நம்புதாழை மற்றும் புதுக்கோட்டை தெற்கு புதுக்கடை பகுதியில், கடல் பசுக்களை வேட்டையாடுவது அதிகரித்து உள்ளது.கடல் பசுக்களை பாதுகாக்க, வடக்கு பாக் ஜலசந்தியில், அதிராம்பட்டினம் முதல், அம்மாபட்டினம் வரை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க, இந்திய வன உயிரின நிறுவனம், தமிழக வனத்துறைக்கு பரிந்துரைத்தது. அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.

நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஆக., 28க்கு ஒத்தி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X