கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆடித்தபசு விழா ஐகோர்ட் தள்ளுபடி

Added : ஆக 01, 2020
Share
Advertisement

மதுரை : சங்கரன்கோவில் சங்கர நாராயணர் சுவாமி கோவிலில், ஆடித்தபசு விழா நடத்தக்கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த, முத்துவைரம் தாக்கல் செய்த பொதுநல மனு:ஹரியும், சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்க, கோமதி அம்மன், சங்கரலிங்க சுவாமியை நோக்கி தவம் புரிந்து, அதன் பயனாக, சுவாமி இடப்பாகத்தில் நாராயணரைக் கொண்டு, சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம், ஆடித் தபசு திருநாள்.இதைக் கண்டால், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் உள்ளனர்.

இம்முறை ஆடித்தபசு விழாவை ரத்து செய்து, பதிலாக அபிஷேகம், அலங்காரம் செய்ய, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது, ஆகம விதிகளுக்கு புறம்பானது. வழக்கம் போல் ஆக., 2ல் ஆடித்தபசு விழா நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது. அறநிலையத் துறை சார்பில், 'கொரோனா பரவலை தடுக்க, ஆக., 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திற்குள் விழா நடக்கும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

'அதிக பக்தர்களை அனுமதித்தால், சமூக இடைவெளியை பின்பற்ற வாய்ப்பில்லை; கட்டுப்படுத்த இயலாது' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள், 'இதில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க இயலாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X