பழக்கன்றுகள், கால்நடைகள்வளர்க்க அரசு மானியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழக்கன்றுகள், கால்நடைகள்வளர்க்க அரசு மானியம்

Added : ஆக 01, 2020
Share

ராமநாதபுரம்:கமுதி வேளாண் தோட்டக்கலைத்துறை சார்பில், 100 எக்டேரில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தபட உள்ளது.

இதில் பயன்பெற விவசாயி ஒரு எக்டேரில் பழமரக்கன்று சாகுபடி செய்ய நிலம் வைத்திருக்க வேண்டும். கால்நடைகள் வளர்க்க அதற்குரிய இடம்வேண்டும். பழக்கன்று சாகுபடிக்கு ரூ.9200, ஒரு கறவை மாடு வளர்ப்பு ரூ.15ஆயிரம், 5 ஆடுகள் வளர்க்க ரூ.7500, 10 நாட்டுக்கோழிகள் வளர்க்க ரூ.3000, தேனீவளர்க்க ரூ.12,800, மண்புழு உரம் தயாரிக்க ரூ.12,500 மானியமாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.தேர்வாகும் நுாறுநபர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும்.

விரும்பும் விவசாயிகள் நிலஆவணங்கள், ஆதார்அட்டை நகல், புகைப்படத்துடன் கமுதி தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அழகுமலை தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X