பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணிக்கு டாக்டர், நர்ஸ்கள் நியமனம்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

சிவகங்கை,:சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு டாக்டர்கள், நர்ஸ்கள், ஆய்வக பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் போதுமான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. சிகிச்சையளிக்கும்டாக்டர்கள், நர்ஸ்கள், போன்றவர்கள் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். 50 சதவீதம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 50 சதவீதம் பேர் ஓய்வில் உள்ளனர்.தற்போது அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில்கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட விருப்பம் உள்ள டாக்டர்கள், நர்ஸ்கள், ஆய்வக நுட்பனர்கள் உடனடியாகபணி நியமனம் செய்யப்படவுள்ளனர்.

டாக்டர்களுக்கு மாதம் 60 ஆயிரமும், நர்ஸ்களுக்கு 14 ஆயிரமும்,ஆய்வக நுட்பனர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் மாத சம்பளமாக வழங்கப்படும் விருப்பம் உள்ளவர்கள் கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவக்கல்லுாரி டீன் ஆகியோரிடம் நேரடியாக தொடர்புகொள்ளலாம், என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X