பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1 தேர்வில் சிவகங்கை மாநில அளவில் 7ம் இடம்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 97.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 1.16 சதவீதம் அதிகரித்துள்ளது. மாநில அளவில் 7 ம் இடத்தை பெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 2017 -18 ல் 152 பள்ளிகளில் இருந்து பிளஸ் 1 படிப்பில் 16, 502 பேர் தேர்வு எழுதியதில் 15,696 பேர் தேர்ச்சி பெற்று 95.12 சதவீதமாக இருந்தது. மாநில அளவில் 9 ம் இடத்தை பெற்றிருந்தது. 2018-19 ல் 155 பள்ளிகளில் இருந்து 16,012 பேர் தேர்வு எழுதியதில் 15,398 பேர் தேர்ச்சி பெற்று 96.17 சதவீதமாக உயர்ந்தது. மாநில அளவில் 16 வது இடத்தினை பெற்றது.

2019-20 ல் 162 பள்ளிகளில் இருந்து 15,936 பேர் தேர்வு எழுதியதில் 15,515 பேர் தேர்வு பெற்று 97.36 சதவீதமாக உயர்ந்துள்ளது.மாநில அளவில் 7 வது இடத்தினை பிடித்து சாதனை படைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X