பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1 மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் சரிவு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சிசதவிகிதம் குறைந்துள்ளது.

மாநில அளவில் கடந்தாண்டு 7 ம் இடத்தில் இருந்தது. தற்போது 14வதுஇடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 152 பள்ளிகளைச் சேர்ந்த7748 பெண்கள் உட்பட 14,751 மாணவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதினர். முடிவுகள் நேற்று வெளியானது.இதில் 14,304 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் அரசு பள்ளிகள்-11, அரசு உதவிபெறும் 10பள்ளிகள், தனியார் பள்ளிகள்- 38 என மொத்தம் 59 பள்ளிகள் மட்டுமே 100 சதவீததேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவிகள்98.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுமுதலிடத்தில் உள்ளனர்.70 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 5249 பேரில் 4959 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

மார்ச் -2019 பிளஸ் 1தேர்வில் 97.33 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 7 ம் இடத்தை பெற்றிருந்தது. இவ்வாண்டு(மார்ச்- 2020ல்) 96.97 சதவீதம் பெற்று 14வது இடத்தில் உள்ளது என கல்விதுறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X