அதிகரிப்பு கொரோனா தொற்று பாதிப்பு :குணமடைவோர் எண்ணிக்கை | Dinamalar

தமிழ்நாடு

அதிகரிப்பு கொரோனா தொற்று பாதிப்பு :குணமடைவோர் எண்ணிக்கை

Added : ஆக 01, 2020
Share

ராமநாதபுரம்,ஆக.1-ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு வாரமாக கட்டுக்குள் உள்ளது. குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கொரோனா தாக்கத்தால் தமிழகத்தில் மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்றில் இருந்து பாதுகாக்க மக்கள் வீடுகளில் இருப்பது தான் ஒரே வழி என அரசு அறிவித்தது.

மே 20 வரை பாதிப்பு கட்டுக்குள் இருந்தது.அதன் பிறகே கொரோனா அதிகரித்தது. தினசரி 100, 200 என பாதிப்பு அதிகரித்து,பலியும் அதிகரித்தது. இதுவரை 71 பேர் இறந்துள்ளனர். பலி எண்ணிக்கையில் ராமநாதபுரம் மாவட்டம் 6வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகளில் அனுமதிக்கப் பட்டவர்களில் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.பாதிக்கப்பட்ட 3255 பேரில் நேற்று 74 பேருடன் இதுவரை 2550 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இது 79.84 சதவீதம் ஆகும்.

71 பேர் பலியான நிலையில் தற்போது 634 பேர் மட்டுமே ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட கொரோனா மையங்களில் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனா பாதித்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தொற்று பாதிப்பும் கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது.---

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X