வீட்டு கனவை நனவாக்கும் 3டி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு கனவை நனவாக்கும் '3டி'

Added : ஆக 01, 2020
Share
அருப்புக்கோட்டை:சிறிய வீடாக இருந்தாலும் சொந்த வீடாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை. சொந்த வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் கனவு. சொந்த வீடு கட்ட வேண்டுமெனில் அதில் பல சிரமங்கள் இருப்பதால் பலருக்கு கனவாகவே உள்ளது. இடம் வாங்குவதில் துவங்கி வீடு கட்டி முடித்து குடியேறும் வரை பல இன்ப, துன்பங்கள் நிறைந்த போராட்டமாக இருக்கும். வீடு கட்டும் போது பொறியாளர் மூலமாக
 வீட்டு கனவை நனவாக்கும் '3டி'

அருப்புக்கோட்டை:சிறிய வீடாக இருந்தாலும் சொந்த வீடாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை. சொந்த வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் கனவு. சொந்த வீடு கட்ட வேண்டுமெனில் அதில் பல சிரமங்கள் இருப்பதால் பலருக்கு கனவாகவே உள்ளது.

இடம் வாங்குவதில் துவங்கி வீடு கட்டி முடித்து குடியேறும் வரை பல இன்ப, துன்பங்கள் நிறைந்த போராட்டமாக இருக்கும். வீடு கட்டும் போது பொறியாளர் மூலமாக வரைப்படம் வரைந்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று உரிய அனுமதி பெற்று பின்னர் பணியை துவங்குவோம்.

கட்டடம் கட்ட துவங்கியவுடன் ஒவ்வொரு மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். இதில் பணம், நேரம், வேலை விரயம் ஏற்படும். நாம் என்னதான் வீட்டின் வரைபடத்தை வைத்துக் கொண்டு பொறியாளருடன் மணிக்கணக்கில் ஆலோசனை செய்தாலும் கிடைக்காத தெளிவு திருப்தி 3 டி தொழில்நுட்பம் கிடைத்து விடுகிறது.ஒரு கதையை படிக்கும் போது தோன்றாத தெளிவு, புரிதல் போன்றவை, காட்சியாக காணும் போது கிடைக்கும்.

அதுபோன்று தான் வீட்டின் முன்புற தோற்றம், உட்பகுதி எந்த தோற்றத்தில் அமைய வேண்டும் என்பதை 3 டி யில் டிசைன் செய்து நிஜத்தில் அமைய உள்ள வீட்டை பூமி பூஜை செய்யும் முன்பே காட்டி விடுகிறார் அருப்புக்கோட்டை ஜே.சி., அசோசியேட்ஸ் உரிமையாளர் ஜான் சுரேஷ் குமார்.

இதுபோன்ற நவீன தொழில் நுட்பங்கள், 3 டி என்ற முப்பரிமாணத்தில் வீடுகளை உருவாக்கி வரும் இவர் நிதி நிலைமையைபொறுத்து குறைந்த செலவில் தரமான வீடுகட்ட ஆலோசனையும் வழங்குகிறார்.செலவை குறைக்கும் 3டி3டி பார்வையில் திட்டமிட்டு விட்டாலே கட்டும் முன்பே வீட்டை பாதி கட்டி முடிப்பதற்கு சமம்.

பரபரப்பு இன்றி குறைந்த செலவில் நம்முடைய கனவு இல்லத்தை நிஜமாக்கி விடலாம். பல வண்ணங்களில் வீட்டை திரையில் பார்த்து தேவையான கலர்களை தேர்வு செய்து அழகு படுத்தி பார்க்கலாம். பழமையில் புதுமையை புகுத்தி கட்டட தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி வாடிக்கையாளர்களின் கனவு இல்லத்தை நனவாக்குகிறோம்.

மேலும் தகவலுக்கு 96777 00580.ஜான் சுரேஷ் குமார், இன்ஜினியர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X