பாதாள சாக்கடை பணியால் நித்தம் அவதி கீழக்காந்திநகரில் தத்தளிக்கும் மக்கள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement
 பாதாள சாக்கடை பணியால் நித்தம் அவதி  கீழக்காந்திநகரில் தத்தளிக்கும் மக்கள்

குடிநீர் தட்டுப்பாடு

நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கிய நிலையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் உடைந்ததால் 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளோம்.

ராணி, குடும்பத்தலைவி

முதியவர்கள் விழுகின்றனர்

பாதாள சாக்கடைக்காக பள்ளம், பேவர் பிளாக் பதிக்க ரோடு தோண்டியதாலும் ரோடு மண்மேடாகி கற்குவியலாக உள்ளது. குழந்தைகள், முதியவர்கள் நடக்க முடியாமல் தடுக்கி விழுகின்றனர். டூவீலர்கள் கூட செல்ல முடியவில்லை.

முருகேஷ்வரி, மகளிர் குழு உறுப்பினர்

தெருவிளக்கு வேண்டும்

தெருவிளக்குகள் அடிக்கடி பழுதாகி எரியாதது குறித்து நகராட்சியில் புகார் செய்தால் சரி செய்ய பல நாட்களாகிறது. இருள் சூழ்ந்து இருப்பதால் இரவு நேரத்தில் வெளியே நடமாட முடிவதில்லை. நோய் பாதித்த நாய்களால் தொற்று நோய் அபாயம் உள்ளது.

நாகலட்சுமி, குடும்பத்தலைவி

நடவடிக்கை உண்டு

பாதாள சாக்கடை பணி முடிந்ததும் புதியதாக ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ராஜமாணிக்கம், நகராட்சி கமிஷனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X