பொது செய்தி

தமிழ்நாடு

நலிவடைந்தும் மவுசு குறையாத கொல்லுப்பட்டறைகள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

தேவதானப்பட்டி:தேவதானப்பட்டி சுற்றுப்பகுதிகளில் கொல்லுப்பட்டறைகள் தொழில் நலிவடைந்தும் மவுசு குறையவில்லை.

விளை நிலங்களில் களை எடுக்க மண் வெட்டி, கொத்து , உழவு கலப்பை, அருவாள் பயன்பாட்டில் உள்ளது.கொல்லுப்பட்டறைகளில் இவற்றிற்கு கைப்பிடி போட்டு, முனை மழுங்கியவை கூர்மைப்படுத்தப்படுகிறது.உழவுப்பணி, வண்டிகளை இழுக்கப் பயன்படும் காளைகளுக்கு கால்களில் புண் ஏற்படாமல் இருக்க லாடம் அடிக்கப்படும்.

தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, எ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், ஜி.கல்லுப்பட்டி கிராமங்களில் 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்த பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவால் மார்ச்சிற்குப்பின்மந்த கதியில் உள்ளது.தேவதானப்பட்டி கொல்லர் மணிகண்டன் கூறியதாவது:மூன்று தலை முறையாக தொழில் செய்து வருகிறோம். விளை நிலங்களில் களை எடுக்க உபகரணங்களுக்கு கைப்பிடி போட்டு பதம் வைத்துக் கொடுக்கிறோம்.

விவசாயப்பணிகள் நடைபெறும் காலங்களில் தினமும் ரூ.2000 வரை வருமானம் கிடைக்கும். கொரோனா பாதிப்பால் வேலை குறைந்து ரூ.500 மட்டுமே கிடைக்கிறது.உழவுப்பணிக்கு டிராக்டர் வந்ததால் காளைகளின் பயன்பாடு இன்றி லாடம் அடிக்கும் பணியும் குறைந்து விட்டது. எனினும் எங்களின் வாழ்வாதாரம் இதுதான். கிராமங்களில் சேதமடைந்துள்ள கொல்லுப்பட்டறைகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X