பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சிலவரிகளில்...தேனி

Added : ஆக 01, 2020
Share
Advertisement

ஆக. 3 முதல் புத்தகம் வழங்கல்

தேனி: மாவட்டத்தில் அரசு,உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 2,3,4,5, 7 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக. 3 முதல் பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்பட உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 20 பேர் வீதம் மாணவர் அல்லது பெற்றோர் பள்ளிக்கு வரவழைத்து முக கவசம், சானிடைசர், சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி தெரிவித்தார்.

ஏலக்காய் கடைகளுக்கு சீல்

தேவாரம்: தேவாரம் தெற்கு தெரு கொரோனா பரவல் 'ஹாட் ஸ்பாட்'ஆக உள்ளது. இங்கு ஏலக்காய் கடைகளில் கட்டுப்பாடுகளை மீறி ஏராளமான பெண்கள் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபடுவதாக கலெக்டருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., கார்த்திகாயினி தலைமையிலான குழுவினர் சோதனையிட்டனர். விதிமீறி செயல்பட்ட 3 ஏலக்காய் கடைகள் 'சீல்' வைக்கப்பட்டன. தலா ரூ. 4500 வீதம் ரூ. 13,500 அபராதம் விதிக்கப்பட்டது.

கபசுர குடிநீர் வழங்கல்

கூடலுார்: கூடலுாரில் கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் ஹிந்து முன்னணி சார்பில் ஐயப்பன்கோயில் அருகே கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. பின்னர் முக்கிய தெருக்களில் மக்களுக்கு வழங்கினர். நகர தலைவர் தெய்வேந்திரன், நிர்வாகிகள் ஜெகன், குமரேசன், கார்த்திக் இப்பணியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

மின்கம்பம் சேதம்

தேவதானப்பட்டி-: ஜெயமங்கலம் மெயின் ரோட்டில் கடை முன்பாக உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இங்கு பலத்த காற்று வீசினால் முறிந்து விழுந்து பாதிப்பு ஏற்படும். விபத்து நடக்கும் முன் இதனை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்களை பதம் பார்க்கு துாசி

போடி-: நகராட்சி பரமசிவன் கோயில் ரோடு, காமராஜ் பஜார் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட குழிகளை மண், கிரசர் துாசியாலும் மூடிவருகின்றனர். ஆடிக்காற்று, கனரக வாகனங்கள் வேகமாக செல்லும் போது துாசி பறந்து மக்களின் கண்களை பதம் பார்க்கின்றன. வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. நகராட்சி இவற்றை அகற்ற வேண்டும்.
6 பேர் மீது வழக்கு

பெரியகுளம்: பட்டாளம்மன் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் 48. இவரது தம்பி தர்மர்
46. கேபிள் 'டிவி'தொழில் செய்யும் இருவருக்கும் போட்டி இருந்து வந்தது. வடுகபட்டி ரோடு பகுதியில் செல்வராஜ் போட்டிருந்த 2.50 லட்சம் கேபிள் ஒயரை, தர்மர், நண்பர்கள் ராமையா, பாஸ்கரன், காமு, முகிலன், மகாதேவன் சேதப்படுத்தி, திருடிச் சென்றனர். தர்மர் உட்பட 6 பேர் மீதும் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X