தமிழ்நாடு

96.02 : பிளஸ் 1 வகுப்பில் மாணவ,மாணவியர் தேர்ச்சி விகிதம்: 49 பள்ளிகள் சதம்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

தேனி: தேனி மாவட்டத்தில் பிளஸ் ஒன் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.02 ஆக உள்ளது தேர்வில் ஆறு அரசு மேல்நிலைப்பள்ளிகள்,உட்பட 49 பள்ளிகள் தேர்வில் சதம் கண்டுள்ளது.

மாவட்டத்தில் இத்தேர்வை 142 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 6933 மாணவர்கள், 7278 மாணவிகள் என மொத்தம் 14,211 பேர் எழுதினர். இதில் 6548 மாணவர்கள், 7097 மாணவிகள் என 13,582 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.02 சதவீத தேர்ச்சியாகும். 2019 ஐ விட 2.05 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 20 இடம் பிடித்துள்ளது. 2019ல் 23வது இடத்தில் இருந்தது.மாணவர்கள் 86.63 சதவீதம், மாணவிகள் 94.43 சதவீத தேர்ச்சி பெற்றனர்.


49 பள்ளிகள் சதம்

இத்தேர்வில் ஆறு அரசு மேல்நிலைப் பள்ளிகள், கள்ளர் பள்ளி, நகராட்சி பள்ளி, உதவி பெறும் பள்ளிகள் தலா ஒன்றும், பகுதி உதவி பெறும் பள்ளிகள் 4, சுயநிதி பள்ளிகள் 2, மெட்ரிக் பள்ளிகள் 34 என 49 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றன. இதில் 57 அரசு பள்ளி மாணவர்கள் 5006 பேர் தேர்வு எழுதியதில் 4645 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 92.79 சதவீதம். 2 ஆதிதிராவிடர் பள்ளிகளில் 61 பேர் எழுதியதில் 54பேர் தேர்ச்சியாகி 88.52 சதவீதமாக உள்ளது.

11 கள்ளர் பள்ளிகளில் 348 பேர் எழுதியதில் 318 பேர் தேர்ச்சியாகி 91.38 சதவீதம், 15 உதவிபெறும் பள்ளிகளில் 2325 பேர் தேர்வு எழுதியதில் 2234 பேர் தேர்ச்சியாகி 96.09 சதவீதம்,12 பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 3032 பேர் எழுதியதில் 2968 பேர் தேர்ச்சி பெற்று 97.89 சதவீதம், 43 மெட்ரிக் பள்ளிகளில் 3238 பேர் எழுதியதில் 3225 பேர் தேர்ச்சி பெற்று 99.60 சதவீதம், 2 சுயநிதி பள்ளிகளில் 201 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சியாகி 100 சதவீத தேர்ச்சி அடைந்தனர்.

மாவட்டத்தில் வருஷநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 23 மாணவர்கள் எழுதியதில் 14 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 60.87 என்ற குறைந்த தேர்ச்சியாகும்.


சிறப்புக்கவனம்



மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி கூறுகையில், '' மாவட்டத்தில் 2019 ஐ ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் சற்று அதிகரித்துள்ளது.மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை பிளஸ்2 தேர்வில் சேர்த்து எழுதி வெற்றி பெறலாம். இக் கல்வியாண்டில் ஆரம்பத்தில் இருந்து பிளஸ் 1 ல் தனிக்கவனம் செலுத்தி மாணவர்கள் வெற்றி பெற, அதிக மதிப்பெண் எடுக்க வைக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X