பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் பிளஸ் 1 தேர்ச்சி 96.20 சதவீதம் * கடந்தாண்டைவிட குறைவு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் பிளஸ் 1 தேர்வில் 96.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்தாண்டை விட 0.04 சதவீதம் குறைவு.

மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 21 ஆயிரத்து 7 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் மாணவர்கள் 9 ஆயிரத்து 319 பேர், மாணவிகள் 10 ஆயிரத்து 889 பேர் என மொத்தம் 20 ஆயிரத்து 208 பேர் தேர்ச்சி பெற்றனர். 799 பேர் தோல்வி அடைந்தனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 47 பேரில் 43 பேர் தேர்ச்சி பெற்றனர்.

நடப்பாண்டில் மாணவர்கள் 94.62 சதவீதம், மாணவிகள் 97.59 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 96.20 சதவீதம். கடந்தாண்டில் 96.24 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 0.04 சதவீதம் குறைந்ததுள்ளது. மாவட்ட அளவில் திண்டுக்கல் 9 வது இடம் பிடித்துள்ளது. அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் உட்பட 71 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X