பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்துார் ஒன்றிய வணிக வளாகத்தை மீட்க ஏற்பாடு 

Added : ஆக 01, 2020
Share
Advertisement

செம்பட்டி:செம்பட்டியில் உள்ள வணிகவளாக கடைகளை மீட்க ஆத்துார் ஒன்றிய நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆத்துார் ஒன்றியத்தின் 20 கடைகள் கொண்ட வணிகவளாகம் செம்பட்டியில் உள்ளது. 2016ல் ஏலம் விடப்பட்டு அதற்கான கால அவகாசம் கடந்த பிப்ரவரியில் முடிந்தது. அவகாசம் முடிந்தும் கடைகளை ஒப்படைக்காததால், நடவடிக்கைகளை ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. நேற்று வரை அவகாசம் அளித்து வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயச்சந்திரன் கூறியதாவது: கடைகளை ஒப்படைக்க வலியுறுத்தி 3 முறை தபால் அனுப்பினோம். முந்தைய ஏலதாரர்கள் தாங்களாகவே கூடுதல் தொகைக்கு டி.டி., மூலம் பணம் அனுப்பினர். அவர்களின் தன்னிச்சையான முடிவை ஏற்க விதிகள் அனுமதிக்காது. போலீஸ் ஒத்துழைப்புடன் கடைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X