தமிழ்நாடு

சித்தாலப்பாக்கம் ஏரி சீரமைப்பு விவகாரம்: அரசு நாள் கடத்துவது ஏனோ!

Added : ஆக 01, 2020
Share
Advertisement



சித்தாலப்பாக்கம் ஏரியை, பருவ மழைக்கு முன், முழுமையாக சீரமைத்து, மழை நீர் சேகரிப்பு மையமாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பது, சமூக ஆர்வலர்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, மேடவாக்கம் அடுத்துள்ளது, சித்தாலப்பாக்கம் ஊராட்சி இது, செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிறது. இங்கு, 203 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது, சித்தாலப்பாக்கம் ஏரி.இந்த ஏரியை சுற்றி, விவசாய நிலங்கள் காணப்பட்டன. ஏரி நீரை பயன்படுத்தும் விவசாயிகளும், ஊர் மக்களும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஏரியை துார் வாரி, கரைகளை சீரமைத்து, பாதுகாத்து வந்தனர்.பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிற்கு வந்த, இந்த ஏரியில், பெரிதாக ஆக்கிரமிப்புகள் இல்லை. கரை பகுதிகளில் மட்டும், சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.ஆனால், முறையாக பராமரிக்கப்படாததால், ஏரியின் பெரும்பகுதி, தரிசு நிலம் போல, மண் மேடுகளுடன் காணப்படுகிறது. இதனால், அதிகளவில் நீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், ஏரியின் நடுவில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இதனால், ஊராட்சி பகுதியினர், ஏரியில் குப்பை கொட்டி வந்தனர். ஏரியில், கழிவு நீரும் திருட்டு தனமாக விடப்படுகிறது. அருகில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கழிவு நீரும், மழை நீர் வடிகால் வழியாக விடப்படுகிறது.கடந்தாண்டு, கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதை அடுத்து, நம் நாளிதழ், 'களமிறங்குவோம்; நமக்கு நாமே' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, சமூக ஆர்வலர்கள், பொது நலச்சங்கத்தினரை ஊக்கப்படுத்தியது.அதன் பலனாக, சென்னை, புறநகரில் உள்ள பல நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டன. சித்தாலப்பாக்கம் ஏரியில், தன்னார்வலர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.பொதுப்பணித் துறை சார்பில், கரைகளை பலப்படுத்தி, நடைபாதை, பூங்கா வசதிகளுடன், ஏரியை மேம்படுத்த திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதன் பின் அத்திட்டம் கிடப்பில் உள்ளது.இந்நிலையில், தன்னார்வலர்கள் சிலர் தொடுத்த வழக்கின் காரணமாக, ஏரியில் கொட்டப்பட்ட குப்பை, மாவட்ட நிர்வாகம் சார்பில், சமீபத்தில் அகற்றப்பட்டது.சித்தாலப்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதோடு, வடகிழக்கு பருவ மழைக்கு முன், ஏரியை முழுமையாக சீரமைத்து, மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்ற வேண்டும், என்ற கோரிக்கை வலுத்துள்ளது. -- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X