சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உறவினர்கள் போல் நடித்து நகை பறித்த மூவர் சிக்கினர்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

மாங்காடு : மாங்காட்டில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், உறவினர் போல் நடித்து, நகை பறித்த, சிறுவன் உட்பட, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.மாங்காடு, அம்பாள் நகரைச் சேர்ந்தவர் ஹேமமாலினி, 28. கடந்த, 25ம் தேதி, மூன்று பேர் கும்பல், ஹேமமாலினி வீட்டிற்கு சென்று, உறவினர்கள் போல் நடித்து, உள்ளே புகுந்தது. பின், கத்தியை காட்டி மிரட்டி, அவரது, 7 சவரன் நகையை பறித்து சென்றது.இது குறித்து, மாங்காடு போலீசார் விசாரித்தனர். இதில், திருவள்ளுர் மாவட்டம், காரனோடையைச் சேர்ந்த கார்மேகம், 36, வியாசர்பாடியைச் சேர்ந்த தினேஷ், 32 மற்றும் 16 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட, மூன்று பேர் சிக்கினர்.விசாரணையில், தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து, அவர்களது கணவரின் உறவினர் போல பேசி, வீட்டிற்குள் புகுந்து, கத்தி முனையில், நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.திருடிய நகைகளை அடமானம் வைத்து, கஞ்சா வாங்க பயன்படுத்தியதும், போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க, வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை ஓரத்தில், பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.அவர்களிடம் இருந்து, மூன்று இருசக்கர வாகனங்கள், 4 சவரன் நகை உள்ளிட்டவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X