மாநகராட்சி பொறியாளர்கள் 35 பேர் தொற்றால் பாதிப்பு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

சென்னை :சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் உட்பட, 35க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும், முன்கள பணியாளர்கள், தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. மாநகராட்சியில் மட்டும், இதுவரை, 400க்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு, தொற்று கண்டறியப்பட்டுள்ளது.குறிப்பாக, வருவாய் துறை, மக்கள் தொடர்பு துறையின் உயரதிகாரிகளும் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பலர், குணமடைந்து, மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.சென்னையில் உச்சத்தில் இருந்த தொற்றை கட்டுப்படுத்த, வார்டு வாரியாக உதவி பொறியாளர் தலைமையில், மைக்ரோ குழுக்கள் அமைக்கப்பட்டு, தடுப்பு பணிகள், தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள், மார்க்கெட் உள்ளிட்டவற்றை கண்காணிப்பது போன்ற பணிகளில், பொறியாளர்கள் தலைமை வகித்து வருகின்றனர்.இந்நிலையில், மாநகராட்சி பொறியாளர்கள் அதிகம் பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.தற்போது, பொதுத்துறை தலைமை பொறியாளர் நந்தகுமார் உட்பட, 35க்கும் மேற்பட்ட பொறியாளர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X