பொது செய்தி

தமிழ்நாடு

கொள்ளையனை பிடித்த போலீசாருக்கு பாராட்டு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

சென்னை : வேளச்சேரியில், வீடு புகுந்து கொள்ளையடித்து வந்தவரை பிடித்த, போலீசாரை பாராட்டி, கமிஷனர் சான்றிதழ் வழங்கினார்.சென்னை, வேளச்சேரி, தண்டீஸ்வரர் நகரில், பாலாஜி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர், விக்னேஷ், 30.கடந்த, 17ம் தேதி, இவரது வீட்டின் கதவு, உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 31 சவரன் நகை, 50 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய், திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.இது குறித்து, வேளச்சேரி போலீசில், விக்னேஷ் புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர், ராஜிவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையிலான, தனிப்படை போலீசார், விசாரித்து, வேளச்சேரி, ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த, பிரபு, 36, என்பவரை, கைது செய்தனர். அவரிடம் இருந்து, பல வீடுகளில் கொள்ளையடித்த, 40 சவரன் நகைகள், 50 கிராம் வெள்ளி பொருட்கள், எல்.இ.டி., டிவி உள்ளிட்ட பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், கொள்ளையன் பிரபுவை கைது செய்த போலீசாரை பாராட்டி, கமிஷனர், மகேஷ்குமார் அகர்வால், நேற்று சான்றிழ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X