சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.70 லட்சம் மதிப்பிலான மொபைல் போன்கள் பறிமுதல்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

சென்னை : சீனாவில் இருந்து, மருத்துவ உபகரணங்கள் என்ற பெயரில், கடத்தி வரப்பட்ட, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்களை, சுங்கத் துறை அதிகாரிகள், பறிமுதல் செய்தனர்.சென்னை விமான நிலையத்திற்கு, சரக்கு விமானங்களில், உயர்ரக மொபைல் போன்கள் கடத்தப்படுவதாக, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு, தகவல் வந்தது. அதன் அடிப்படையில், சென்னை விமான நிலையத்திற்கு வரும் சரக்குகளை, சுங்கத் துறையினர் தீவிரமாக கண்காணித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், சீனாவின், ஹாங்காங் நகரில் இருந்து, மருத்துவ உபகரணங்களுடன், சரக்கு விமானம் ஒன்று, சென்னை விமான நிலைய சரக்கத்திற்கு வந்தது.அதில் வந்த பார்சல்களை, சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, 'கே.என் - 95' ரக முக கவசங்கள் என குறிப்பிடப்பட்டிருந்த பார்சல்களை சோதனையிட்ட போது, அதன் உள்ளே, 'சாம்சங்' நிறுவனத்தின், புதிய 'கேலக்ஸி' ரக '5ஜி' மொபைல் போன்கள், 40 கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு, 70 லட்சம் ரூபாய்.மருத்துவ உபகரணங்கள் என்ற பெயரில், உயர்ரக மொபைல் போன்களை கடத்தியவர்கள் குறித்து, சுங்கத் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X