வண்டலுாரில் சிங்கம் காட்டெருமை உயிரிழப்பு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்காவில், கடந்த சில நாட்களில், சிங்கம், காட்டெருமை இறந்ததாக கூறப்படுகிறது.சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்காவில், நான்கு நாட்களுக்கு முன், 'லயன் சவாரி' பகுதியில் இருந்த, 29 வயதான சிங்கம், உடல்நலக் குறைவால் இறந்தது. இதேபோல், கர்ப்பம் அடைந்திருந்த காட்டெருமை ஒன்று, சில தினங்களுக்கு முன், கன்று ஈன்றது. பிறந்த கன்று, சற்று நேரத்தில், திடீரென இறந்தது. இதன்பின், தாய் காட்டெருமையும் இறந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம், சிறுத்தை மட்டும் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், நெருப்புக் கோழி ஒன்றும் இறந்துள்ளதாக, ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.வண்டலுார் பூங்காவின், துணை இயக்குனராக, சுதாராமன் என்பவர் உள்ளார். இவர், பதவியேற்கும் முன், விலங்குகள் பிறப்பு, இறப்பு விபரங்கள் மற்றும் பூங்காவில் நடக்கும் நிகழ்வுகள், உடனுக்குடன் பூங்காவின், மக்கள் தொடர்பு அலுவலரால் தெரிவிக்கப்படும்.இவர், பதவியேற்ற பின், இந்த விபரங்கள் சரிவர வெளியிடப்படாததுடன், ஊழியர் சங்க நிர்வாகிகள், வனச் சரக அதிகாரிகள் உட்பட, பூங்காவில் பணிபுரியும், அனைத்து தரப்பினரையும், துணை இயக்குனர் ஒருமையில் பேசுவதாக, குற்றச்சாட்டு எழுகிறது.இது குறித்து, உயர் அதிகாரிகள் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X