பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா தலங்களுக்கு 'இ பாஸ்' வழங்க கடும் நிபந்தனை அவசியம்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:சுற்றுலா தலங்களுக்கு செல்ல 'இ பாஸ்' வழங்குவதில் கடுமையான நிபந்தனைகளை கடைபிடிக்கா விட்டால், கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த முடியாது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் இ பாஸ் வழங்குவதில் கெடுபிடி காட்டுவது வரவேற்கத்தக்கது. தொடுதலைவிட நெரிசலால் தான் தொற்று எளிதில் பரவுகிறது. இதனால் பொதுமக்கள் கூடும் எல்லா இடங்களுக்கும் அரசு அனுமதி மறுக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று வரை 2760 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதுவரை 46 பேர் இறந்துள்ளனர். தினமும் 100 பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ பாஸ் விண்ணப்பங்கள் அதிகம் வருகின்றன.துவக்கத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் குறைவான பாதிப்பே இருந்தது. பின்னர் டில்லி, சென்னை, மதுரையில் இருந்து வந்தவர்களால் அதிகரித்தது.

சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு செல்வதை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்தியும் பலர் மீறிச்சென்றதால், கொடைக்கானல் கிராம பகுதிகளிலும் தொற்று பரவியது.எனவே திண்டுக்கல் மாவட்டத்திற்கு குறிப்பாக சுற்றுலா தலங்களுக்கு இ பாஸ் வழங்க கடும் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முடியாது.

கொடைக்கானல் ஆர்.டி.ஓ., சிவகுமாரிடம் கேட்டபோது, ''இங்கு வசிப்போரை தவிர மற்றவர்களுக்கு சரியான காரணமில்லாமல் இ பாஸ் தருவதில்லை'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X