சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிமென்ட் காரைகள் விழுந்து தாய் - மகள் படுகாயம்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

திருவொற்றியூர் :வீட்டின் மேல்தள சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததில், தாய் - மகள் படுகாயமடைந்தனர்.சென்னை, திருவொற்றியூர், காலடிப்பேட்டை, பாலகிருஷ்ணா நாயுடு காலனியில் வசிப்பவர் தணிகாசலம்; சுமை துாக்கும்தொழிலாளி. இவரது மனைவி, ஜோதி, 40.தம்பதிக்கு, பவித்ரா, 21, சவுமியா, 18, ஆகிய, இரு மகள்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு, வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து அனைவரும், 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டின் மேல்தள சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தன.இதில், ஜோதி மற்றும் சவுமியா மீது கட்டட இடிபாடுகள் விழுந்து, அவர்கள் பலத்த காயமுற்றனர். அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து, திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X