புதிய தோட்டம் அமைக்க 40 சதவீதம் மானியம்: காய்கறி விவசாயிகளை ஊக்குவிக்க திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'புதிய தோட்டம் அமைக்க 40 சதவீதம் மானியம்': காய்கறி விவசாயிகளை ஊக்குவிக்க திட்டம்

Added : ஆக 01, 2020
Share

கோவை:''கோவை மாவட்டத்தில், தோட்டப்பயிர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு, 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது,'' என்று, தோட்டக்கலை துணை இயக்குனர் புவனேஸ்வரி தெரிவித்தார்.இது குறித்து, புவனேஸ்வரி கூறியதாவது:கோவை மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக, நடப்பாண்டில் மானியத்துடன் கூடிய திட்டங்களை செயல்படுத்த, 4.93 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.வீரிய ஒட்டு ரக காய்கறி, முருங்கை, மா, திசு வாழை, பப்பாளி, உதிரி மலர்கள், கிழங்கு வகை மலர்கள், மிளகாய் மற்றும் மிளகு, கோகோ ஆகியவற்றில் தோட்டம் அமைக்க, 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.இதற்கு, 1075 எக்டர் பரப்புக்கு, 2.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காய்கறி விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு எக்டருக்கு, 2500 ரூபாய் வீதம், 2000 எக்டருக்கு, 50 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.35 பேருக்கு வழங்க இலக்குதோட்டங்களில் நீர் ஆதாரத்தை பெருக்க, நீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த, 50 சதவீதம் மானியத்தில், ஒரு அலகுக்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த மானியம், 35 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளான பசுமைக்குடில், நிழல் வலை குடில், 7000 சதுர மீட்டர் பரப்பிலும், நிலப்போர்வை 50 எக்டர் பரப்பிலும் அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு 37 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அரசின் இந்த திட்டங்களில் பயன் பெற விரும்பும் விவசாயிகள், அந்தந்த வேளாண் விரிவாக்க மையங்களில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுகலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X