தமிழ்நாடு

மதுரையில் இந்தாண்டு பிளஸ் 1 தேர்ச்சி விகிதம் 0.49 சதவீதம் குறைவு

Added : ஆக 01, 2020
Share
Advertisement
    மதுரையில் இந்தாண்டு பிளஸ் 1 தேர்ச்சி விகிதம் 0.49 சதவீதம் குறைவு

மதுரை: மதுரையில் இந்தாண்டு பிளஸ் 1 தேர்ச்சி விகிதம் 0.49 சதவீதம் குறைந்துள்ளது. மாணவிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.மாவட்டத்தில் 323 பள்ளிகளை சேர்ந்த 36,360 (மாணவர் 17,588, மாணவி 18,772) பேர் தேர்வு எழுதினர். நேற்று வெளியான முடிவுகளில் 96.54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 94.89 சதவீதமும், மாணவிகள் 98.9 சதவீதமும் அடங்கும்.ஒரு அரசு, 2 மாநகராட்சி, 6 கள்ளர், 106 மெட்ரிக் உட்பட மொத்தம் 135 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன. மாநில ரேங்க் பட்டியலில் கடந்தாண்டு 9வது இடம் வகித்த மதுரை, தற்போது 19க்கு பின்தங்கியுள்ளது.அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.02 சதவீதம். கடந்தாண்டை விட அதிகரித்துள்ளது. பாடங்கள் வாரியாக 1028 மாணவர்கள் 'சென்டம்' மதிப்பெண் பெற்றனர்.கல்வி மாவட்டங்களில் திருமங்கலம் 97.77 சதவீதம் பெற்று முதலிடத்திலும், மதுரை - 96.34 சதவீதம் பெற்று இரண்டாம், மேலுார் - 96.24 சதவீதம் பெற்று மூன்றாம், உசிலம்பட்டி 95.47 சதவீதம் பெற்று நான்காம் இடங்களையும் பெற்றன.சி.இ.ஓ., சுவாமிநாதன் கூறுகையில் "மொத்த மாநில தேர்ச்சியை (96.04 சதவீதம்) விட மாவட்ட தேர்ச்சி 0.50 அதிகரித்துள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தினோம். அடுத்தாண்டு மாவட்ட ரேங்க் பட்டியலில் முன்னேற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X