பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்தை அனுமதிக்க மடீட்சியா கோரிக்கை

Added : ஆக 01, 2020
Share
Advertisement

மதுரை, ஊரடங்கு ஆக.31 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்து அனுமதிக்கவேண்டும் என மடீட்சியா கோரிக்கை விடுத்துள்ளது.தலைவர் முருகானந்தம் கூறியதாவது: சிறு குறுந்தொழில்கள் பொருளாதார ரீதியில் பாதித்த நிலையில் தளர்வில்லா ஊரடங்கு நீடித்தால் நிலைமை மிக மோசமாகும். மாத தவணை ஜி.எஸ்.டி. கட்டுவது சம்பளம் கொடுப்பது போன்ற நிர்பந்தங்கள் இம்மாதம் துவங்கிவிடும்.இந்த ஊரடங்கில் பொது போக்குவரத்து இ-பாஸ் இல்லாமல் சென்றுவர அனுமதிக்க வேண்டும். இ-பாஸ் மாவட்ட நிர்வாகத்திற்கு பணிச்சுமையை தான் தருகிறதே தவிர வேறு எவ்விதத்திலும் பயன்படவில்லை. ஏனென்றால் நான்கு வழிச்சாலைகள் கண்காணிப்பின்றி இருக்கும் நிலையில் பலர் கிராம சாலை வழி சென்று வருகிறார்கள். பொது போக்குவரத்தை நம்பியுள்ள சாமானியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X