பாட்டு பாடி நெல் நடவில் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாட்டு பாடி நெல் நடவில் அசத்தல்

Added : ஆக 01, 2020
Share
கூடலுார்:கூடலுாரில், பழங்குடி பெண்கள், பாட்டுபாடி நெல் நடவு பணியில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில், மழை பெய்துள்ள நிலையில், நெல் விவசாயத்தை, பழங்குடியினர் துவக்கி உள்ளனர். ஸ்ரீமதுரை ஊராட்சி, கம்மாத்தி விவசாயிகள் நேற்று முதல் நெல் நடவு பணி துவங்கினர். பழங்குடி பெண்கள், பாரம்பரிய பாடல்களைப் பாடி, பணியில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறுகையில்,
 பாட்டு பாடி நெல் நடவில் அசத்தல்

கூடலுார்:கூடலுாரில், பழங்குடி பெண்கள், பாட்டுபாடி நெல் நடவு பணியில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில், மழை பெய்துள்ள நிலையில், நெல் விவசாயத்தை, பழங்குடியினர் துவக்கி உள்ளனர். ஸ்ரீமதுரை ஊராட்சி, கம்மாத்தி விவசாயிகள் நேற்று முதல் நெல் நடவு பணி துவங்கினர். பழங்குடி பெண்கள், பாரம்பரிய பாடல்களைப் பாடி, பணியில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறுகையில், 'இப்பகுதியில் நெல் நடவு பணிகளில் பழங்குடி பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். பாட்டுப்பாடி நடவுப் பணியில் ஈடுபடுவது அவர்களின் தனிச்சிறப்பு. மன இறுக்கத்தில் இருக்கும் மக்களுக்கு இது ஆறுதல் அளிப்பதாக உள்ளது' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X