எப்.சி., வழங்க புதிய மொபைல் செயலி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எப்.சி., வழங்க புதிய 'மொபைல்' செயலி

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share
 எப்.சி., வழங்க புதிய 'மொபைல்' செயலி

கூடலுார்:கூடலுார் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், புதிய 'மொபைல்' செயலி மூலம் எப்.சி., வழங்கப்படுகிறது.நம் மாநிலத்தில், வணிக பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்குவதில் தொடரும் முறைகேடுகளை தவிர்க்க, போக்குவரத்து அலுவலகத்தை ஒட்டி, 500 மீட்டருக்குள் செயல்படும், 'எம்-வாகன்' என்கிற புதிய 'மொபைல்' செயலியை போக்குவரத்துத்துறை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.முதன் முறையாக, கூடலுார் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், இந்த முறையை பயன்படுத்தி எப்.சி.,வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில்,'புதிய முறையில், வாகனத்தின் விபரங்களுடன், அதன் நான்கு பக்கங்களையும் 'போட்டோ' எடுத்து பதிவு செய்த பின்பே, எப்.சி., ஒப்புதலுக்கு அனுப்ப முடியும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X