கல்லுாரியில் மாணவர் சேர்க்கைசேவை மையம் அமையுமா

Added : ஆக 01, 2020
Share
Advertisement

மதுரை :'தனியார் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான சேவை மையம் அமைக்க அனுமதிக்க வேண்டும்' என மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரிகள் நிர்வாக சங்கம் வலியுறுத்தியது.அச்சங்க பொதுச்செயலாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளதாவது:கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 20ல் துவங்கியது. கிராம மாணவர்களுக்கு போதிய அளவில் இணையதள சேவை கிடைக்கவில்லை. அவர்கள் விண்ணப்பிக்கவும், விரும்பும் கல்லுாரிகளை தேர்வு செய்யவும் முடியவில்லை. அனைத்து கல்லுாரிகளிலும் போதிய அளவு விண்ணப்பம் இணையதளம் மூலம் வரப்பெறவில்லை.சேவை கட்டணமின்றி விண்ணப்ப கட்டணம் மட்டும் பெற்று ஆன்லைனில் விண்ணப்பிக்க கல்லுாரிகளில் சேவை மையம் ஏற்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும். மாணவர் நலன் கருதி 15 நாட்களுக்கு சிறப்பு பஸ் ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X