பிளஸ் 1 தேர்விலும் மார்க் அள்ளிய வெள்ளியங்காடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1 தேர்விலும் மார்க் அள்ளிய 'வெள்ளியங்காடு'

Added : ஆக 01, 2020
Share

மேட்டுப்பாளையம்:பிளஸ் 1 தேர்வில், வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியும், மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.காரமடையை அடுத்த வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 பொதுத்தேர்வில், 92 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்வு பெற்றுள்ளனர். தொடர்ந்து இப்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.வெற்றிபெற்ற மாணவர்களை, பள்ளி தலைமையாசிரியர் பள்ளி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமதாஸ், முன்னாள் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேர்வு எழுதிய, 143 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளை, பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X